சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 17 பேர் கைது


சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 17 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2023 7:00 PM GMT (Updated: 20 Oct 2023 7:00 PM GMT)

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக...

மும்பை பெருநகர் பகுதிகளில் அதிகளவில் நைஜீரியர்கள், வங்க தேசத்தினர் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் போதைப்பொருள், விபசாரம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சட்டவிரோதமாக மும்பையில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த சுமன் மொமின் சர்தார் (வயது31), ஒமர் பரூக் மொல்லா (27), சல்மான் ஆயுப் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்த அடையாள அட்டைகளை பெற வந்த போது அவர்கள் போலீசில் சிக்கினர்.

17 பேர் கைது

விசாரணையில் ஒமர் பரூக் மொல்லா, சல்மான் ஆயுப் ஆகியோர் வங்க தேசத்தில் இருந்து அந்த நாட்டினரை சட்டவிரோதமாக மும்பைக்கு அழைத்து வரும் ஏஜெண்டுகள் என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரார், நாலச்சோப்ரா பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 14 வங்க தேசத்தினரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 17 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story