பிவண்டியில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போட்ட 17 பேர் கைது


பிவண்டியில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போட்ட 17 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2023 6:45 PM GMT (Updated: 3 Jan 2023 6:47 PM GMT)

பிவண்டியில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானே மாவட்டம் பிவண்டி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திடீரென கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், சில மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென பள்ளி முன் திரண்ட பலர் ஒரு மாணவருடன் சேர்ந்து போராட்டம் செய்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story