சோலாப்பூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்- 6 பேர் பலி


சோலாப்பூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்- 6 பேர் பலி
x

சோலாப்பூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.

மாவட்ட செய்திகள்

புனே,

சோலாப்பூரில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலை பணி

சோலாப்பூர் மாவட்டம் பென்னூர் கிராமத்தில் உள்ள பந்தர்பூர்- மோகோல் நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை தொடர்பான பணிகள் நடைபெற்றது.

இதனால் அப்பகுதியில் அந்த 2 வழி சாலையை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. ஆகையால் ஒரே சாலையில் இரு புறங்களிலும் வானங்கள் சென்று வந்தன. இந்நிலையில மாலை 4.30 மணி அளவில் அந்த வழியாக வேகமாக வந்த எஸ்.யூ.வி. கார் ஒன்று முன்னாள் சென்ற வாகனத்தை அதிவேமாக முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார், அந்த எஸ்.யூ.வி. கார் மீது மோதியதில் பயங்கரமாக விபத்து ஏற்பட்டது.

இதில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கின.

6 பேர் பலி

இதில் 2 கார்களிலும் இருந்த 4 பேர் இடிபாடுகளுக்கு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மகோல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் எஸ்.யூ.வி.கார் டிரைவர் செய்த தவறு காரணமாக விபத்து நேர்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----


Next Story