மேம்பால தடுப்பு சுவரில் ஸ்கூட்டி மோதி 2 பேர் பலி

மும்பை,
சாந்தாகுருஸ்-செம்பூர் இணைப்பு சாலை மேம்பாலத்தில் சம்பவத்தன்று இரவு 2 பேர் ஸ்கூட்டியில் பயணம் செய்தனர். அப்போது ஸ்கூட்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டியில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரை மீட்டு ராஜாவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து திலக்நகர் போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் கணேஷ் ஆர்டே (வயது40) மற்றும் அவரது நண்பர் ருபேஷ் பெட்னேகர் (40) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






