சாலை விபத்தில் 2 பேர் பலி: பணியில் அலட்சியம் காட்டிய ஒப்பந்ததாரர் மீது வழக்கு


சாலை விபத்தில் 2 பேர் பலி: பணியில் அலட்சியம் காட்டிய ஒப்பந்ததாரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Sept 2022 2:30 AM IST (Updated: 23 Sept 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் மாவட்டம் அம்பேகாவ் பகுதியில் சாலை விபத்தில் 2 பேர் பலி

வசாய்,

பால்கர் மாவட்டம் அம்பேகாவ் பகுதியில் கடந்த 20-ந்தேதி மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது, சாலையில் இருந்த பள்ளம் காரணமாக டிரைவர் காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த டெம்போவுடன் கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர் ராம்ராத்தோட் அலட்சியமாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழந்து வருவதாக தெரியவந்தது.

இதன்பேரில் சாலை ஒப்பந்ததாரர் ராம் ராத்தோட் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பால்கர் போலீஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் நவத்கர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story