கனமழையின் போது 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் - தேடும் பணி தீவிரம்


கனமழையின் போது 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் - தேடும் பணி தீவிரம்
x

பிவண்டியில் கனமழையின் போது 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தானே,

தானே மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் போது வெவ்வேறு சம்பங்களில் நடந்த விபத்தில் 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் பிவண்டி பட்கா தாலுகாவை சேர்ந்த பின்டியா (வயது35) என்பவர் ஆற்றில் மீன் பிடிக்க சென்றிருந்தார். அப்போது ஆற்றில் தவறி விழுந்ததால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இது வரையில் அவரது உடல் கிடைக்கவில்லை.

இதே போல காம்வாரி நதியில் குளித்த 19 வயது வாலிபரான ஆசிப் அன்சாரியும் ஆற்று வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டார். தீயணைப்பு படையினர் படகு மூலமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அவரை தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story