சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி- உடன் வந்த மாணவனை காப்பாற்றி உயிரை விட்ட சோகம்


சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி- உடன் வந்த மாணவனை காப்பாற்றி உயிரை விட்ட சோகம்
x

சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவனை காப்பாற்றிய 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தானே,

சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவனை காப்பாற்றிய 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மூழ்கிய மாணவர்கள்

தானே மாவட்டம் அம்பர்நாத் அருகே மலங்காட் கோட்டை பகுதிக்கு டோம்பிவிலி தனியார் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள் சுற்றுலா வந்திருந்தனர். அதில் 2 மாணவர்கள் அங்குள்ள அம்பே ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தனர். இதில் ஒரு மாணவர் தண்ணீரில் நிலை கொள்ள முடியாமல் மூழ்கினார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற 2 மாணவர்கள் தண்ணீரில் குதித்து அவரை காப்பாற்றினர். ஆனால் அவரை காப்பாற்றிய 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் பிணமாக தான் மீட்கப்பட்டனர். இது குறித்து ஹில்லைன் போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் நிகில் கனோஜியா மற்றும் அங்கித் ஜெய்ஸ்வால் எனவும், அவர்கள் 17 வயதுயுடையவர்கள் எனவும் தெரியவந்தது.

17 வயது சிறுவன் மீட்பு

இதே போல சாகேத் பகுதியில் 17 வயது சிறுவன் மேம்பாலத்தில் இருந்து தவறி கீழே கழிமுக கால்வாயில் விழுந்தான். இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் படகு மூலம் கால்வாயில் தவறி விழுந்த இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர்.

மற்றொரு சம்பவத்தில் திவா பட்கேபாடா ஏரி அருகே நின்ற கார் ஒன்று கனமழையின் காரணமாக அடித்து செல்லப்பட்டது. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் விரைந்து சென்று காரில் சிக்கி இருந்த 28 வயது வாலிபரை மீட்டனர்.


1 More update

Next Story