அந்தேரியில் 291 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்


அந்தேரியில் 291 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரியில் கலப்பட பால் விற்று வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 291 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

அந்தேரியில் கலப்பட பால் விற்று வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 291 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

மும்பை அந்தேரி மேற்கு வெர்சோவா பாரத்நகரில் கலப்பட பால் விற்கப்படுவதாக உணவு மற்றும் மருந்துதுறை அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாரத்நகரில் உள்ள குறிப்பிட்ட வீட்டிற்கு கடந்த 16-ந்தேதி போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு பிரபல பால் நிறுவனத்தின் காலி பாக்கெட்டுகள் மற்றும் கலப்படம் செய்த பால் பாக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் இருந்ததை கண்டனர்.

2 பேர் கைது

இதையடுத்து அங்கிருந்த 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தண்ணீரை கலந்து கலப்பட பாலை சந்தையில் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 291 லிட்டர் கலப்பட பாலை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலப்பட பால் தயாரித்த ராம்லிங்கயா காஜி, கட்மையா நரசிம்மா ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story