வெவ்வேறு இடங்களில் லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி


வெவ்வேறு இடங்களில்  லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:11+05:30)

மும்பை,

மும்பை மலாடு மத் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீடு ஒன்றுக்கு கடந்த 17-ந்தேதி லாரியில் செங்கல்கள் வந்து இறங்கியது. தொழிலாளிகள் செங்கல்களை இறக்கிய பின்னர் லாரியை பின்புறமாக டிரைவர் செலுத்தி உள்ளார். அப்போது சாலை ஓரமாக படுத்து தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற நபர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானாார்.

இதேபோல ஓஷிவாராவில் சாலை ஓரமாக வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் இருந்த தொழிலாளி மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

போரிவிலி வஜிராநாக்கா பகுதியில் நடைபாதையில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவர் சம்பவத்தன்று அங்குள்ள காலி இடத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி பின்னோக்கி எடுக்க முயன்றபோது ராஜேஷ் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல்நசுங்கி அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்துகள் தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story