கடனை திருப்பி செலுத்த தவறிய நண்பருக்கு 3 மாதம் சிறை; ரூ.24 லட்சம் அபராதம்


கடனை திருப்பி செலுத்த தவறிய நண்பருக்கு 3 மாதம் சிறை; ரூ.24 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 4 Sept 2023 12:45 AM IST (Updated: 4 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கடனை திருப்பி செலுத்த தவறிய நண்பருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.

தானே,

கடனை திருப்பி செலுத்த தவறிய நண்பருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.12 லட்சம் கடன்

தானே மாவட்டம் மிராபயந்தர் பகுதியை சேர்ந்தவர் மந்தா பசீர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நண்பரான சூரஜ் லோண்டே என்பவருக்கு ரூ.12 லட்சம் கடனாக கொடுத்தார். பின்னர் சூரஜ் லோண்டே கடனை திருப்பி செலுத்த காசோலை கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திருப்பி வந்தது. இதனால் மந்தா பசீர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கும் பதில் இல்லாததால் அவர் சம்பவம் குறித்து தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

3 மாதம் சிறை

வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு ஜே.ஆர். முலானி தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பில், 2 பேருக்கும் இடையே நட்பு இருந்தாலும் 5 ஆண்டுக்கு மேலாக மந்தா பசீர் பண இழப்பை சந்தித்து வந்து உள்ளார். இதனால் குற்றவாளியான சூரஜ் லோண்டேக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையில் ரூ.23 லட்சத்து 75 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு காசோலை மோசடி தொடர்பாக 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு அளித்தார்.


Related Tags :
Next Story