போலீஸ்காரரை தாக்கிய விசாரணை கைதிக்கு 3 ஆண்டு கடுங்காவல்

போலீஸ்காரரரை தாக்கிய வழக்கில் விசாரணை கைதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
தானே,
போலீஸ்காரரரை தாக்கிய வழக்கில் விசாரணை கைதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
கைவிலங்கு தகராறு
தானே போலீஸ் துறையில் போலீஸ்காரர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி தலோஜா சிறையில் இருந்த விசாரணை கைதி பிலால்கான் என்பவர் உள்பட 10 பேரை வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு அழைத்து சென்றார். போலீஸ் வேனில் அழைத்து செல்லும் போது பிலால்கானுடன் மற்ற விசாரணை கைதியுடன் சேர்த்து கைவிலங்கு போடப்பட்டது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு தலோஜா சிறைக்கு திரும்பும் போது மீண்டும் மற்றொருவருடன் சேர்த்து பிலால்கானிற்கு கைவிலங்கு போடப்பட்டது.
3 ஆண்டு கடுங்காவல்
இதனால் ஆத்திரமடைந்த பிலால்கான் போலீஸ்காரரை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதனை தொடர்ந்து பிலால்கானிற்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.






