லோனார் ஏரி மேம்பாட்டுக்கு ரூ.369 கோடி- மந்திரி சபை ஒப்புதல்


லோனார் ஏரி மேம்பாட்டுக்கு ரூ.369 கோடி- மந்திரி சபை ஒப்புதல்
x

முறையாக பயிர்க்கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும், லோனார் ஏரி மேம்பாட்டிற்கு ரூ.369 கோடி ஒதுக்கீடு செய்யவும் மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை,

முறையாக பயிர்க்கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும், லோனார் ஏரி மேம்பாட்டிற்கு ரூ.369 கோடி ஒதுக்கீடு செய்யவும் மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவு

விண்கல் தாக்கியதில் உருவான பள்ளத்தால் உலகில் உருவான ஒரே ஏரி என்று கருதப்படும் லோனார் ஏரியை பாதுகாக்கவும், இதற்காக மேம்பாட்டு ஆணையம் அமைக்கவும் கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பாக முதல்-மந்திரி ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்ட மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தேசிய பாரம்பரிய நினைவு சின்னமான லோனார் ஏரியின் மேம்பாட்டிற்காக ரூ.369.78 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அமராவதி மண்டல கமிஷனர் மேற்பார்வையில் இந்த வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.

இந்த மேம்பாட்டு திட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களை பராமரித்தல், வனவிலக்கு பாதுகாப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் சாலை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயிர்க்கடன்

பயிர்க்கடனை முறையாக திரும்பி செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் மராட்டிய கருவூலத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த முடிவால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

2019-ம் ஆண்டு வெள்ளத்தில் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் மற்றும் ஏற்கனவே இயற்கை பேரிடர் காரணமாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களும் இந்த பலனை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story