அவுரங்காபாத்தில் மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் பலி


அவுரங்காபாத்தில் மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் பலி
x

அவுரங்காபாத்தில் மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் மாவட்டம் ஹவர்கேடா-நந்த்கிர்வாட் கிராமத்தின் இடையே உள்ள உயரழுத்த மின் கம்பியில் பழுது நீக்கும் பணி பிற்பகல் 3 மணி அளவில் நடந்தது. இந்த பணியில் மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மின் கம்பியில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 ஊழியர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி அறிந்த கிராமமக்கள் கன்னட் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதன்படி போலீசார் அங்கு சென்று உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் பலியான சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story