காட்கோபரில் வீடு இடிந்து 4 பேர் காயம்


காட்கோபரில் வீடு இடிந்து 4 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:30 PM GMT (Updated: 26 Jun 2023 7:31 PM GMT)

மும்பை காட்கோபர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து 4 பேர் காயமடைந்தனர்

மும்பை,

மும்பையில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், கட்டிட விபத்துகள் அடுத்தடுத்து நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று காலை 8.30 மணியளவில் காட்கோபர் ரமாபாய் அம்பேத்கர் காலனியில் அம்பேத்கர் சிலை அருகே 2 மாடி கொண்ட சால் வீடு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் முதல் தளத்தின் ஒரு பகுதி இடிந்து அருகில் உள்ள அறையின் மீது விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மகாதேவ் (வயது50), சுனிதா (42), ரோகித் (23), வைபவ் (22) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story