பூங்காவில் சிமெண்ட் பெஞ்ச் விழுந்து 4 வயது சிறுமி பலி; நவிமும்பையில் சோகம்


பூங்காவில் சிமெண்ட் பெஞ்ச் விழுந்து 4 வயது சிறுமி பலி; நவிமும்பையில் சோகம்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் பூங்காவில் சிமெண்ட் பெஞ்ச் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தாள்.

மும்பை,

நவிமும்பையில் பூங்காவில் சிமெண்ட் பெஞ்ச் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தாள்.

பூங்காவுக்கு சென்ற சிறுமி

நவிமும்பை கார்கர் செக்டார் 12 பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் விஸ்வகர்மா. காவலாளியான இவர் சம்பவத்தன்று மதியம் வீட்டருகே உள்ள பூங்காவுக்கு மகள் பிரிஜாவை (வயது4) விளையாட அழைத்து சென்றார். சிறுமி பூங்காவில் விளையாடி கொண்டு இருந்தாள். சற்று தூரத்தில் இருந்து காவலாளி மகளை கண்காணித்து கொண்டு இருந்தார்.

பரிதாப சாவு

சிறுமி பூங்காவில் இருந்த சிமெண்ட் பெஞ்ச் மீது உட்கார சென்றாள். அப்போது அவள் தவறி கீழே விழுந்தாள். அப்போது, சிறுமி மீது மோசமான நிலையில் இருந்த சிமெண்ட் பெஞ்சும் சரிந்து விழுந்தது. சிறுமி பெஞ்சுக்கு கீழ் சிக்கி நசுங்கினாள். இதைப்பார்த்து ஓடிவந்த காவலாளி மகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். பூங்காவில் சிமெண்ட் பெஞ்ச் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் கார்கர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story