கல்யாண் ரெயில் நிலையத்தில் ஒரு நாள் சோதனையில் ஓசிப்பயணம் செய்த 4,438 பயணிகள் சிக்கினர் - ரூ.16 லட்சம் அபராதம் வசூல்

கல்யாண் ரெயில் நிலையத்தில் ஒரு நாள் சோதனையில் ஓசிப்பயணம் செய்த 4,438 பயணிகள் சிக்கினர் - ரூ.16 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 17 Oct 2023 7:30 PM GMT (Updated: 17 Oct 2023 7:30 PM GMT)

கல்யாண் ரெயில் நிலையத்தில் ஒரு நாளில் நடந்த அதிரடி சோதனையில் ஓசிப்பயணம் செய்த 4,438 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தானே,

கல்யாண் ரெயில் நிலையத்தில் ஒரு நாளில் நடந்த அதிரடி சோதனையில் ஓசிப்பயணம் செய்த 4,438 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

4,438 பயணிகள்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஓசிப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை கண்டறிய டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது. காலை 7 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணி வரையில் நடந்த இந்த அதிரடி சோதனையில் 167 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் 35 ரெயில்வே போலீசார் ஈடுபட்டனர். மின்சார ரெயில்கள் மற்றும் தொலை தூர ரெயில்களில் வந்தவர்களிடம் நடத்திய சோதனையில் 4 ஆயிரத்து 438 பயணிகள் டிக்கெட் இன்றி ஓசிப்பயணம் மற்றும் சட்டவிரோத பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.

ரூ.16.85 லட்சம் அபராதம் வசூல்

இவர்களிடம் இருந்து ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் டிக்கெட் பரிசோதகர்களிடம் அத்து மீறியதாக 27 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுபோன்ற திடீர் டிக்கெட் பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும். பயணிகள் ஓசிப்பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்றார்.

Next Story