மராட்டியத்தில் புதிதாக 450 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 450 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 3 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 450 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 3 பேர் பலியாகி உள்ளனர்.
அதிரடி உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 450 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 10 ஆயிரத்து 787 பேருக்கு எடுக்கப்பட்ட சளி பரிசோதனையில் இந்த முடிவு வெளியானது. நேற்று முன்தினம் 205 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்து 42 ஆயிரத்து 509 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 79 லட்சத்து 91 ஆயிரத்து 728 பேர் குணமாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 343 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையில் புதிதாக 135 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
3 பேர் பலி
இதேபோல மாநிலம் முழுவதும் புதிதாக 3 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். பலியானவர்கள் சிந்துதுர்க், ரத்னகிரி, உஸ்மனாபாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 434 பேர் உயிரிழந்து உள்ளனர்.






