சாந்தாகுரூசில் ரூ.48 லட்சம் போதைப்பொருளுடன் 5 பேர் கைது


சாந்தாகுரூசில் ரூ.48 லட்சம் போதைப்பொருளுடன் 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:37+05:30)

மும்பை,

மும்பை சாந்தாகுரூஸ் ரோட்ரிக்ஸ் குடிசைபகுதியில் சிலர் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது 1.62 கிலோ சரஸ், 353 கிராம் கஞ்சா மற்றும் சூதாட்டம் நடத்த பயன்படுத்தப்படும் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.48 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எங்கிருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்தனர்? எதற்காக பதுக்கி வைத்திருந்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story