15 வயது சிறுவன் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி- போலீசார் மீட்டனர்


15 வயது சிறுவன் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி- போலீசார் மீட்டனர்
x

தாயிடம் கோபித்துக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

தாயிடம் கோபித்து கொண்டு சோட்டா காஷ்மீர் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 15 வயது சிறுவனை போலீசார் துரிதமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குட்பை எழுதிய சிறுவன்

மும்பை வன்ராய் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன். இவன் வீட்டில் இருந்த தாயிடம் ஒரு பிரச்சினை காரணமாக வாக்குவாதம் செய்தான். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டான். சிறிது நேரம் கழித்து தாய் டேபிளில் காகிதம் இருந்ததை கண்டார். அதில் சிறுவன் எழுதி இருந்த குட்பை என்ற வாசகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காமல் போனதால் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதன்படி சிறுவனின் பெற்றோர் வன்ராய் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் மீட்டனர்

இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை தொடர்புகொண்டு சிறுவனை கண்காணிக்கும்படி தெரிவித்தார். இதன்படி ஆரே காலனி சோட்டா காஷ்மீர் பகுதியில் உள்ள ஏரி அருகே சிறுவன் நடமாடியதை போலீசார் கண்டனர். உடனே அங்கு செல்லும் முன்பு சிறுவன் ஏரியில் குதித்து விட்டான். ஆனால், தண்ணீர் குறைவாக இருந்ததால் சேற்றில் சிக்கி கொண்டான். இதனைக்கண்ட போலீசார் அங்கு சென்று சேற்றில் சிக்கி இருந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் ஆரே காலனி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பெற்றோரை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து அவனை அனுப்பி வைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால், தற்கொலைக்கு முயன்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

-----


Next Story