மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 வாலிபர்கள் கைது


மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 வாலிபர்கள் கைது
x

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலி நம்பர் பிளேட் பொருத்திய மோட்டார் சைக்கிள்களில் வந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலி நம்பர் பிளேட் பொருத்திய மோட்டார் சைக்கிள்களில் வந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

போலீசில் புகார்

பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 45 வயது தொழிலதிபர், கடந்த 14-ந்தேதி இரவு 12 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் மும்பையில் இருந்து வசாய் நோக்கி சென்றார். மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை தகிசர்-காஷிமிரா சாலையில் வந்த போது பின்னால் இருந்து விரட்டி வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், செல்போனை பறித்து சென்றனர்.

இது பற்றி தொழிலதிபர் தகசிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

6 பேர் கைது

மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தில், அது போலி நம்பர் எனவும், அதனை ஓட்டி சென்ற வாலிபர் ஆகாஷ் பால் (வயது26) எனவும் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர் போலி நம்பர் பிளேட் பொருத்திய மோட்டார் சைக்கிள்களில் தனது கூட்டாளிகளான 5 பேருடன் சேர்ந்து நெடுஞ்சாலையில் தனியாக செல்லும் நபர்களிடம் வழிப்பறி செய்து வந்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட காந்திவிலி, போரிவிலி பகுதியை சேர்ந்த ராகுல்வாக்மாரே (21), கிரண் சூர்யவன்சி (25), வைபவ் போல் (23), சூரஜ் (22), குரு காவ்தியா (27) ஆகிய மேலும் 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தங்க நகைகள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story