93 சதவீத ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்


93 சதவீத ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு  திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2023 1:30 AM IST (Updated: 2 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் புழக்கத்தில் உள்ள 93 சதவீத ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

மும்பை,

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

1 More update

Next Story