தானேயில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற 10 அடி மலைப்பாம்பு


தானேயில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற 10 அடி மலைப்பாம்பு
x
தினத்தந்தி 26 Sep 2023 8:00 PM GMT (Updated: 26 Sep 2023 8:00 PM GMT)

தானேயில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஜன்னல் வழியாக வீட்டிகுள் நுழைய முயன்றது

தானே,

தானே நவ்பாடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக மலைப்பாம்பு ஒன்று உள்ேள புகுந்து செல்ல முயன்றது. இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பாம்பு பிடி நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி நண்பர்கள் 2 பேர் மலைபாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் லாவகமாக பிடித்தனர். சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து காட்டில் கொண்டு போய் விட எடுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story