14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

பால்கர்,
பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு வாலிவ் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் வீட்டில் கடிதம் ஒன்று இருந்ததை கைப்பற்றினர். சிறுமி தன் கைப்பட எழுதி இருந்த அந்த கடிதத்தில், "என்னை எனது தந்தை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இது பற்றி தாயிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது தந்தைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று உருக்கமாக கூறியிருந்தார்.
போலீசார் சிறுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவளது தந்தையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






