டி.வி. செட்டாப் பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலி


டி.வி. செட்டாப் பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 10 Aug 2023 12:30 AM IST (Updated: 10 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. செட்டாப் பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலியானான்.

நாக்பூர்,

டி.வி. செட்டாப் பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலியானான்.

கார்டூடன் படம் பார்த்த சிறுவன்

நாக்பூர் மாவட்டம் கைரே பன்னாசே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் பிற்பகல் டி.வி.யில் கார்ட்டூன் படம் பார்த்து கொண்டிருந்தான். சிறுவனின் தந்தை படுக்கை அறையில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது சிறுவன் டி.வி.யுடன் இணைக்கப்பட்டு இருந்த செட்டாப் பாக்சை பிடித்து இழுத்தான். அதில் இருந்த மின்வயர் சிறுவனின் உடலில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதை கவனிக்காத தந்தை சிறிது நேரம் கழித்து படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தபோது, மகன் தரையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பரிதாப சாவு

உடனடியாக அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. செட்டாப் பாக்ஸ்சில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story