சிவ்ரி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற பெண் பலி


சிவ்ரி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற பெண் பலி
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவ்ரி ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு சென்றது. சிவ்ரி ரெயில் நிலையம் வந்த போது அந்த ரெயிலில் பயணித்த பார்வை இழந்த தம்பதி இறங்கினர். இதன் பின்னர் அடுத்த பெட்டியில் ஏறுவதற்கு விரைந்து ஓடினர். அப்போது தவறுதலாக பெண் பிளாட்பார இடைவெளி வழியாக தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இந்த நிலையில் மின்சார ரெயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பார்வை இழந்த பெண்ணின் மீது மோதியது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு ரெயிலை நிறுத்தினர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று படுகாயத்துடன் கிடந்த பார்வை இழந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பெண் பலியானார். பார்வை இழந்த தம்பதி ரெயிலில் பிச்சை எடுத்து வருபவர்கள் என தெரியவந்தது. சிவ்ரி ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கி அடுத்த பெட்டிக்கு மாறும் போது இந்த துயர சம்பவம் நேர்ந்து உள்ளது.

1 More update

Next Story