மும்பையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த திறந்த மாடி பஸ்களுக்கு ஓய்வு


மும்பையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த திறந்த மாடி பஸ்களுக்கு ஓய்வு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த திறந்த மாடி பஸ்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த திறந்த மாடி பஸ்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

திறந்த மாடி பஸ் சேவை

மும்பையில் திறந்த மாடி பஸ் சேவை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 'நீலாம்பரி' என பெயரிடப்பட்டு இருந்த அந்த பஸ்கள் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகள் தென்மும்பையின் அழகை திறந்தவெளி மாடி பஸ்களில் சென்று கண்டு களித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் 3 திறந்த மாடி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. மேலும் இந்த பஸ்கள் சுற்றுலா பயணிகளுக்காக மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

உலக கோப்பை வெற்றி கொண்டாட்டம்

பிறந்தநாள் போன்ற விழாக்களை கொண்டாடவும் பொது மக்கள் திறந்த மாடி பஸ்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, கோப்பையுடன் திறந்த மாடி பஸ்சில் மும்பையில் ஊர்வலமாக சென்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் 2 திறந்த மாடி பஸ்கள் திரும்ப பெறப்பட்டன. மீதமிருந்த ஒரு பஸ்சும் நேற்று முதல் திரும்ப பெறப்பட்டுள்ளது. மும்பையில் கடைசியாக இயக்கப்பட்ட டீசல் மூலம் இயக்கப்பட்ட மாடி பஸ் இதுவாகும். 15 ஆண்டுகள் பழமையானதை அடுத்து திறந்த மாடி பஸ்களை திரும்ப பெற்றதாக பெஸ்ட் அதிகாரி ஒருவர் கூறினார். டீசலில் இயங்கப்பட்டு வந்த திறந்த மாடி பஸ்களுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் திறந்த மாடி பஸ்களை இயக்க பெஸ்ட் நிர்வாகம் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story