கட்டுமான அதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு


கட்டுமான அதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 July 2023 7:30 PM GMT (Updated: 23 July 2023 7:30 PM GMT)

கட்டுமான அதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

கட்டுமான அதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்ற பாதுகாப்பு

மும்பை பெடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கட்டுமான அதிபர் பெரோஷ் உஸ்மான் டின்வாலா. இவர் வடலா பகுதியில் புதிய கட்டிடம் கட்ட உள்ளார். கட்டுமான அதிபர் கட்டிடம் கட்ட உள்ள பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை அங்கு இருந்து அப்புறப்படுத்த கட்டுமான அதிபர், வடலாவில் உள்ள ஆர்.ஏ.கே. மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.

ரூ.20 லட்சம் லஞ்சம்

இந்தநிலையில் சமீபத்தில் ஆர்.ஏ.கே. மார்க் போலீஸ்காரர் ஒருவர் கட்டுமான அதிபரை தொடர்பு கொண்டு பேசினார். கட்டிடம் கட்ட உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு வழங்கவேண்டுமெனில் ரூ.20 லட்சம் தரவேண்டும் என கேட்டார். பணம் கொடுத்தால் தான் பாதுகாப்பு வழங்க சீனியர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சம்மதம் பெற முடியும் என தெரிவித்தார். இது தொடர்பாக கட்டுமான அதிபர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், கட்டுமான அதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


Next Story