நகைக்கடையில் ரூ.28 லட்சம் கொள்ளையடித்த கும்பலுக்கு வலைவீச்சு

நகைக்கடையில் புகுந்து ரூ.28 லட்சம் கொள்ளை அடித்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
நகைக்கடையில் புகுந்து ரூ.28 லட்சம் கொள்ளை அடித்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
கொள்ளை
மும்பை போரிவிலி பரேனா நகர் பகுதியில் ஜே.ஜி. கரேகர் என்ற நகைக்கடை உள்ளது. கடந்த 8-ந்தேதி இரவு 9 மணி அளவில் நகைக்கடை உரிமையாளர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலை 5.25 மணி அளவில் அவரது செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அவர் தனது கடைக்கு விரைந்து சென்றார். அப்போது, நகைக்கடையின் இரும்பு ஷட்டரின் இடைவெளியில் எட்டி பார்த்தபோது 2 பேர் நகைக்களை கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர்.
காரில் தப்பி சென்ற கும்பல்
இதையடுத்து உடனே அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை வெளியே காரில் அமர்ந்து இருந்த பார்த்துக்கொண்டிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் நகைக்கடையில் கொள்ளை அடித்துக்கொண்டிருந்த 2 பேரையும் உஷார்படுத்தி வெளியே அழைத்தனர். பின்னர் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிசென்றனர். இதனை கண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது முடியாமல் போனது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரூ.28 லட்சம் அளவிற்கு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தப்பி சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






