ஆரேகாலனியில் குடியிருப்பு கட்டிடத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு


ஆரேகாலனியில் குடியிருப்பு கட்டிடத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு
x

ஆரேகாலனியில் குடியிருப்பு கட்டிடத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு

மும்பை,

மும்பையின் உள்ள வனப்பகுதியான அரேகாலனியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று அதிகாலை நேரத்தில் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. கட்டிடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி சிறுத்தைப்புலி உள்ளே குதித்து வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. பின்னர் அங்கும் இங்குமாக சுற்றித்தரிந்த சிறுத்தைப்புலி கட்டிடத்தின் பிராதான வாயில் வழியாக வெளியேறியது.

இது கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் கட்டிடத்தில் வசிப்பவர்கள் பீதிக்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பலர் இந்த கட்டிடம் மக்கள் குடியிருப்பு அல்ல இது தான் சிறுத்தைப்புலியின் உண்மையான இருப்பிடம். மக்கள் தான் அதன் இடத்தை அக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளனர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரேகாலனியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் காணப்படுவது. இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல முறை சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் இங்கு காணப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story