நாசிக்கில் போர் விமான பயிற்சி பள்ளி மீது பறந்த மர்ம டிரோனால் பரபரப்பு

நாசிக்கில் போர் விமான பயிற்சி பள்ளி மீது பறந்த மர்ம டிரோனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
நாசிக்கில் போர் விமான பயிற்சி பள்ளி மீது பறந்த மர்ம டிரோனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம டிரோன்
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் காந்திநகரில் நாசிக்- புனே நெடுஞ்சாலையில் இந்திய ராணுவத்தின் போர் விமான பயிற்சி பள்ளி (சி.ஏ.டி.எஸ்.) உள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் மர்ம டிரோன் ஒன்று போர் விமான பயிற்சி பள்ளி மேல் பறந்து உள்ளது.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தும் முன், அந்த டிரோன் அங்கு இருந்து மாயமானது. இது குறித்து போர் விமான பயிற்சி பள்ளி சார்பில் உப்னாநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் போர் விமான பயிற்சி பள்ளி மேல் பறந்த டிரோன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போர் விமான பயிற்சி பள்ளி விமானிகள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி மையம் ஆகும்.
இங்கு வானில் போரிட ராணுவத்தை சேர்ந்த விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே அதன் மீது மர்ம டிரோன் பறந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






