அக்னிபத் திட்டத்தில் சேர வந்த வாலிபர் ரெயில் மோதி பலி


அக்னிபத் திட்டத்தில் சேர வந்த வாலிபர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 23 Sept 2022 7:30 AM IST (Updated: 23 Sept 2022 7:30 AM IST)
t-max-icont-min-icon

மும்ரா ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தில் சேர வந்த வாலிபர் ரெயில் மோதி பலி

தானே,

மும்ரா ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11 மணி அளவில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரெயில் வாலிபர் மீது மோதி விட்டு சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை ரெயில்வே போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே வாலிபர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து தானே ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் துலே மாவட்டத்தை சேர்ந்த ராமேஷ்வர் தேவ்ரே(வயது21) எனவும், அண்மையில் தொடங்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள மும்பை வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உடலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story