சொந்த ஊருக்கு வர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து விட்டு தப்பிய வாலிபர் கைது


சொந்த ஊருக்கு வர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து விட்டு தப்பிய வாலிபர் கைது
x

சொந்த ஊருக்கு வர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்று விட்டு தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சொந்த ஊருக்கு வர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்று விட்டு தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை வந்த தம்பதி

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சோமார். இவரது இரண்டாவது மனைவி ஆதினபீபி சேக் (வயது31). கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் மும்பைக்கு வேலை தேடி கடந்த மாதம் 28-ந்தேதி வந்தனர். மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பெக்ராம் பாக் பகுதியில் வசித்து வந்த உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

இதற்கிடையில் கணவர் சோமாருக்கு சொந்த கிராமத்தில் வேலை கிடைத்தது. இதனால் மனைவியிடம் தன்னுடன் சொந்த கிராமத்திற்கு வருமாறு தெரிவித்தார். இதற்கு அவர் மறுத்ததால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த 7-ந்தேதி இரவு ஊருக்கு வர மறுத்த மனைவியை சோமார் கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடினார்.

கணவர் கைது

இதில் படுகாயம் டைந்த ஆதினபீபி சேக்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் கூப்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 25 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த அம்போலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனைவியிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சோமாரை ரெயில் மற்றும் விமான நிலையங்களில் தேடி வந்தனர். இறுதியாக செல்போன் டவர் மூலம் லோயர்பரேலில் பதுங்கி இருந்த சோமாரை கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story