வாலிபருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல்

மும்பை,
மும்பை கார் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ரெயிலுக்காக காத்து இருந்தார். அப்போது திடீரென வாலிபர் ஒருவர் பின்னால் இருந்து வந்தார். அவர் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். அருகில் இருந்த பயணிகள் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மாணவியிடம் அத்துமீறியவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அலோக் கனோஜியா (வயது35) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் மானபங்க வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ரெயில்நிலையத்தில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த வாலிபருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Next Story






