நவிமும்பையில் 5 வயது சிறுமியை லிப்டில் அழைத்து சென்று கற்பழித்த ஏ.சி. மெக்கானிக் கைது


நவிமும்பையில் 5 வயது சிறுமியை லிப்டில் அழைத்து சென்று கற்பழித்த ஏ.சி. மெக்கானிக் கைது
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் 5 வயது சிறுமியை லிப்ட்டில் அழைத்து சென்று கற்பழித்த ஏ.சி. மெக்கானிக் தப்பி செல்ல முயன்ற போது அக்கம் பக்கத்தினர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மும்பை,

நவிமும்பையில் 5 வயது சிறுமியை லிப்ட்டில் அழைத்து சென்று கற்பழித்த ஏ.சி. மெக்கானிக் தப்பி செல்ல முயன்ற போது அக்கம் பக்கத்தினர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிறுமி கற்பழிப்பு

நவிமும்பை தலோஜா பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 7-ந் தேதி கட்டிடத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த கட்டிடத்திற்கு வாலிபர் ஒருவர் ஏ.சி. பழுது பார்க்கும் பணிக்காக வந்திருந்தார். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுமியை லிப்டினுள் அழைத்தார். இதற்கான காரணம் அறியாத சிறுமி லிப்டில் ஏறி செல்ல ஆசைப்பட்டு வாலிபருடன் சென்றாள்.

ஆனால் அந்த ஆசாமியை சிறுமியை லிப்டில் வைத்து கற்பழித்தார். பின்னர் கட்டிடத்தின் 11-வது மாடிக்கு அழைத்து சென்று சிறுமியை விட்டு தப்பி சென்றார். அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டிற்கு சென்ற போது உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

மடக்கி பிடித்தனர்

பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது தனக்கு நேர்ந்த சம்பவத்தை தெரிவித்தாள். உடனே பெற்றோர் கட்டிடத்தின் கீழே வந்து காவலாளியிடம் அடையாளம் தெரியாத நபர் யாரேனும் வந்தனரா என விசாரித்தனர். இதற்கு காவலாளி மறுப்பு தெரிவித்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

அந்த கூட்டத்தில் கற்பழித்த வாலிபர் நின்றிருப்பதை சிறுமி கண்டு சத்தம் போட்டாள். இதனை அறிந்த வாலிபர் அங்கிருந்து நைசாக தப்பி ஓடினார். இருப்பினும் கட்டிடவாசிகள் விரட்டி சென்று வாலிபரை மடக்கி பிடித்து தலோஜா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆசாமி முகமது அக்தர் (வயது19) எனவும், சிறுமியை கற்பழித்தாகவும் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story