முன்னாள் செயலாளர் மீதான நடிகை பிரியங்கா சோப்ராவின் வழக்கு ரத்து


முன்னாள் செயலாளர் மீதான நடிகை பிரியங்கா சோப்ராவின் வழக்கு ரத்து
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் செயலாளர் மீதான நடிகை பிரியங்கா சோப்ராவின் வழக்கு ரத்து செய்யப்பட்டது.

மும்பை,

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் செயலாளராக ஜாஜு என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது ஏற்பட்ட பண பிரச்சினைகள் தொடர்பாக ஜாஜு மீது வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்குகள் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.

இந்தநிலையில் 2008-ம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா, ஜாஜு தனக்கு மோசமான, ஆபாசமான செய்திகளை அனுப்பி பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாக புறநகர் வெர்சோவா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் 2022-ம் ஆண்டு ஜாஜு மும்பை ஐகோர்ட்டில் தனது மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். இதில் நடிகை பிரியங்கா சோப்ராவுடன், மனுதாரர் சுமூகமாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொண்டதாகவும், எனவே வழக்கை தொடர்வது கோர்ட்டு மற்றும் போலீசாரின் நேரத்தை வீணடிக்கும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகை பிரியங்கா சோப்ரா காணொலி காட்சி மூலமாக ஆஜராகி, வழக்கை ரத்து செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என கூறினார்.

இதையடுத்து கோர்ட்டு ஜாஜு மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டது.

1 More update

Next Story