நடிகை ராக்கி சாவந்த் கணவரை போலீஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும்- கோர்ட்டில் மனு


நடிகை ராக்கி சாவந்த் கணவரை போலீஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும்- கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ராக்கி சாவந்த் கணவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.

மும்பை,

நடிகை ராக்கி சாவந்த் கணவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.

சிறையில் அடைப்பு

இந்தி நடிகை ராக்கி சாவந்த் தனது கணவர் மீது மும்பை போலீசில் சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்தார். இதில் கணவர் அடில் துரானி தன்னை தாக்கியதாகவும், தனக்கு தெரியாமல் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடியதாகவும், மேலும் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கில் அடில் துரானியை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர் கடந்த 7-ந் தேதி மும்பை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் காவலில் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு போலீசார் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கோர்ட்டு அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தது.

மறுஆய்வு மனு

இந்தநிலையில் போலீசார் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து செசன்சு கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக அடில் துரானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. எனவே அவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story