சரத்பவாரை அஜித்பவார் சந்தித்தது பெரிய விசயம் ஒன்றும் அல்ல - தேவேந்திர பட்னாவிஸ் கருத்து


சரத்பவாரை அஜித்பவார் சந்தித்தது பெரிய விசயம் ஒன்றும் அல்ல - தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
x
தினத்தந்தி 17 July 2023 1:15 AM IST (Updated: 17 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சரத்பவாரை அஜித்பவார் சந்தித்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, கட்சியை உடைத்த அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவு மந்திரிகள் மும்பையில் நேற்று சந்தித்து பேசினர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "பல ஆண்டுகளாக சரத்பவார் அவர்களின் தலைவராக உள்ளார். எனவே அவர்கள் கண்டிப்பாக சரத்பவாரை சந்திக்க செல்வார்கள். இது பெரிய விசயம் ஒன்றும் அல்ல" என கூறினார். இது குறித்து மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் கூறுகையில், "அஜித்பவார் தரப்பு சரத்பவாரை தங்களது தலைவர் என தற்போதும் கருதுகிறது. எனவே மூத்த தலைவரை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை" என்றார்.

1 More update

Next Story