மும்பையில் தட்டமைக்கு 8 மாத குழந்தை பலி

மும்பையில் தட்டமைக்கு 8 மாத குழந்தை பலியானது.
மும்பை,
மும்பையில் தட்டமை நோய் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வந்தது. நோய் பரவலை தடுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சாக்கிநாக்காவை சேர்ந்த 8 மாத பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். எனினும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்தநிலையில் குழந்தை சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தது. குழந்தை தட்டமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. இதுவரை நகரில் சுமார் 20 குழந்தைகள் தட்டமைக்கு பலியாகி உள்ளன. தற்போது மும்பையில் 62 குழந்தைகள் தட்டமைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story






