நுபுர் சர்மா சர்ச்சை விவகாரம்:- அமராவதி மருந்து கடை உரிமையாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது

நுபர் சர்மா ஆதரவளித்த அமராவி மருந்து கடை உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அமராவதி,
அமராவதியில் பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளரான நுபுர்சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மருந்து கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி இது வரையில் 9 பேரை கைது செய்து உள்ளனர். கொலையில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமராவதியில் உள்ள இமாம்நகர் லால்காடியை சேர்ந்த ஷேக் சகீல் (வயது28) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து கடை உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






