மும்பையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அரியானா பெண் டாக்டர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


மும்பையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அரியானா பெண் டாக்டர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

மும்பையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அரியானாவை சேர்ந்த பெண் டாக்டர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மும்பை,

மும்பையில் காயங்களுடன் மீட்கப்பட்ட அரியானாவை சேர்ந்த பெண் டாக்டர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அரியானா பெண் டாக்டர்

மும்பை கோரேகாவ் பகுதியில் கடந்த மாதம் 31-ந் தேதி பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் போலீசாரால் மீட்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பால்கரில் உள்ள தொண்டு நிறுவனத்தின் ஆசிரமத்தில் ஒப்படைத்தனர். ஆசிரமத்தினர் இணையதளம் மூலமாக பெண்ணின் குடும்பத்தினரை தேடிவந்தனர். போலீசார் உதவியுடனும் பெண் குறித்த விவரங்களை டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களில் தேடினர்.

21 நாட்கள் தீவிர முயற்சிக்கு பிறகு ஆசிரம உளவியல் நிபுணரிடம் பெண் அவர் குறித்த விவரங்களை தெரிவித்தார். இதன் மூலம் அவர் அரியானாவை சேர்ந்த டாக்டர் கரோலினா கபூர் (வயது42) என்பது தெரியவந்தது.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

டாக்டர் பால்கர் ஆசிரமத்தில் இருப்பது தொடர்பாக தகவல் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. பெண் டாக்டரின் சித்தப்பா, மைத்துனர் பால்கர் வந்தனர்.

போலீசார் விசாரணைக்கு பிறகு மும்பையில் மீட்கப்பட்ட பெண் டாக்டரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தன்னை நன்றாக பார்த்து கொண்ட ஆசிரம ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பெண் டாக்டர் அரியானா மாநிலம் குருகிராமுக்கு புறப்பட்டு சென்றார்.

பெண் டாக்டர் எப்படி மும்பை வந்தார், தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.


Next Story