மதுபோதையில் பெண் எம்.எல்.சி.யை தாக்கியவர் கைது

மதுபோதையில் பெண் எம்.எல்.சி.யை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மதுபோதையில் பெண் எம்.எல்.சி.யை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பெண் எம்.எல்.சி. மீது தாக்குதல்
ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.சி. பிரதன்யா ராஜீவ் சதாவ். இவரை நேற்று முன்தினம் ஹிங்கோலியில் மர்ம நபர் தாக்கினார். இதுதொடர்பாக பிரதன்யா ராஜீவ் சதாவ் டுவிட்டரில் கூறியிருந்ததாவது:-
கஸ்பே தவாந்தா, கலாம்நுரி கிராமத்தில் நான் கடுமையாக தாக்கப்பட்டேன். ஒருவர் என்னை பின்னல் இருந்து வந்து தாக்கினார். என்னை காயப்படுத்த தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஒரு பெண் எம்.எல்.சி. மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னால் நின்று போராடுவேன். பயப்படமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
தாக்கியவர் கைது
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண் எம்.எல்.சி.யை தாக்கியதாக மகேந்திரா என்ற 40 வயது நபரை கைது செய்தனர்.
மது போதையில் இருந்த அந்த நபர் எம்.எல்.சி.யை தாக்கியதாக ஹிங்கோலி மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீதர் கூறியுள்ளார்.






