இலவச சூப் வழங்கிய கடை உரிமையாளர் மீது தாக்குதல்- 2 பேர் மீது வழக்கு


இலவச சூப் வழங்கிய கடை உரிமையாளர் மீது தாக்குதல்- 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

இலவச சூப் வழங்கிய கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனே,

புனே காட்கி பகுதியில் கடை வைத்து நடத்தி வருபவர் முலாயம் பால் (வயது27). இவர் கடந்த 6-ந்தேதி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இலவசமாக சூப் வழங்கினார். இது அவரது கடை அருகே மற்றொரு கடையை நடத்தி வந்த சித்தார்த் பாலேராவ் மற்றும் அவரது தொழில் பங்குதாரர் திக்விஜய் கசாரே ஆகியோருக்கு பிடிக்கவில்லை. தங்களது கடைக்கு போட்டியாக இலவசமாக சூப் வழங்கிய முலாயம் பால் மீது முன்விரோதம் கொண்டனர்.

கடந்த 6-ந்தேதி முலாயம் பால் அருகே உள்ள கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டு இருந்தபோது அங்கு வந்த சித்தார்த் பாலேராவ் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கினார். அவருடன் வந்த திக்விஜய் காசாரே கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட முலாயம் பால் சம்பவம் குறித்து போலீசி்ல் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story