நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய மாணவர் மீது தாக்குதல்; 100 பேர் மீது வழக்கு


நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய மாணவர் மீது தாக்குதல்; 100 பேர் மீது வழக்கு
x

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது., இது தொடர்பாக 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

தானே,

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா. இவர் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் பிவண்டியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சாத் அன்சாரி, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 100 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவரின் வீட்டுக்கு சென்றனர். இதில் சிலர் மாணவரை தாக்கினர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியது.

இந்தநிலையில் பிவண்டி போலீசார் மாணவரின் வீட்டின் முன் வன்முறையை தூண்டியது, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதேபோல நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசியதற்காக போலீசார் மாணவர் சாத் அன்சாரியையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story