வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன்; ஐகோர்ட்டு உத்தரவு


வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன்; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Oct 2023 7:15 PM GMT (Updated: 6 Oct 2023 7:15 PM GMT)

வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

மும்பை,

வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

வெடிகுண்டு தயாரிப்பு

நாலாசோப்ரா பகுதியை சேர்ந்தவர் வைபவ் ராவத் (வயது44). இவரை கடந்த 2018-ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வைபவ் ராவத் வலதுசாரி அமைப்பான சனாதன் சனஸ்தா அமைப்பை சேர்ந்தவர் எனவும், அவர் புனேயில் நடக்க இருந்த நிகழ்ச்சியை சீர்குலைக்க கையெறி வெடிகுண்டுகள் தயாரித்து வீடு, குடோனில் பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் வைபவ் ராவத் தொடர்பான இடங்களில் இருந்து கையெறி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

5 ஆண்டுக்கு பிறகு ஜாமீன்

கடந்த 5 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வைபவ் ராவத் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, கவுரி கோட்டே ஆகுயோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வைபவ் ராவத் 5 ஆண்டுகளாக சிறையில் இருப்பதையும், வழக்கு விசாரணை முடிய மேலும் காலம் ஆகும் என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கினர்.


Next Story