கர்நாடக வங்கி பெயர் பலகைக்கு கருப்பு மை பூச்சு- மராத்திய அமைப்பு போராட்டம்


கர்நாடக வங்கி பெயர் பலகைக்கு கருப்பு மை பூச்சு- மராத்திய அமைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாசிக்,

மராட்டியம்- கர்நாடகம் இடையே எல்லைப் பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் தாக்குதல் சம்வங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் உள்ள கர்நாடக வங்கியின் கனடா கர்னர் வங்கி கிளை முன் சுவராஜ்ய சங்கதானா என்ற மராத்திய அமைப்பினர் சுமார் 20 பேர் திடீரென திரண்டனர். அவர்கள் திடீரென கர்நாடக வங்கியின் பெயர் பலகைக்கு கருப்பு மை பூசினர். பின்னர் அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கரண் கைகர் கூறுகையில், "மராட்டிய வாகனங்களை சேதப்படுத்தியதன் மூலம் தாங்கள் ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டதாக கர்நாடகத்தில் உள்ள அமைப்புகள் நினைத்தால், அந்த மாநிலத்தில் இருந்து ஒரு வாகனத்தையும் மராட்டியத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். கர்நாடக மக்கள் இங்கு எந்த வியாபாரமும் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கிறோம்" என்றார்.

1 More update

Next Story