'பாடி பேக்' முறைகேடு வழக்கு; முன்னாள் மேயரை கைது செய்ய இடைக்கால தடை


பாடி பேக் முறைகேடு வழக்கு; முன்னாள் மேயரை கைது செய்ய இடைக்கால தடை
x
தினத்தந்தி 5 Sept 2023 1:00 AM IST (Updated: 5 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

‘பாடி பேக்' முறைகேடு வழக்கில் முன்னாள் மேயரை கைது செய்ய மும்பை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது

மும்பை,

கொரோனா பரவலின் போது அதிக விலை கொடுத்து உடல்களை மூடும் பை (பாடி பேக்) வாங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கிஷோரி பெட்னேக்கர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். செசன்ஸ் கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது, இதையடுத்து அவர் முன்ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணை நீதிபதி என்.ஜே. ஜமாதர் அமர்வு முன் நடந்தது. அப்போது மனு குறித்து பதில் அளிக்க போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டனர். இதையடுத்து நீதிபதி மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார். மேலும் கிஷோாி பெட்னேக்கரை 2 நாட்களுக்கு கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.

1 More update

Next Story