காதலனின் போலீஸ் காவல் நீட்டிப்பு

மும்பை,
வசாயில் உள்ள நைகாவ் ஸ்டியோவில் கடந்த 24-ந்தேதி இரவு டி.வி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் சக நடிகர் ஷீசன் கான் (27) என்பவர் தான் தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விசாரணை காலம் முடிந்த நிலையில் நேற்று வசாய் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்காக கூடுதல் நாட்கள் தருமாறு போலீசார் கோரிக்கை வைத்தனர். இதன்படி அவரது போலீஸ் காவல் கூடுதலாக 2 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். துனிஷா சர்மாவின் தாய் தனது மகளை ஏமாற்றி பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






