பட்சா அணை கால்வாயில் உடைப்பு- 25 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் நாசம்

பட்சா அணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் 25 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் நாசமாகின.
மும்பை,
தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் பட்சா அணை கால்வாயின் தடுப்பு சுவரில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென விரிசல் ஏற்பட்டது. இதில் தடுப்பு சுவர் உடைந்து கால்வாய் தண்ணீர் அவ்ரோ கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக சுமார் 25 ஹெக்டேர் பரப்பில் கோதுமை, காய்கறி போன்ற பயிர்கள் நாசமாகின. தகவல் அறிந்து நீர்வளத்துறையினர் அணையில் இருந்து கால்வாய்க்கு செல்லும் தண்ணீரை நிறுத்தினர்.
சம்பவம் குறித்து சகாப்பூர் தாசில்தார் நீலிமா சூரியவன்சி கூறுகையில், "அதிகாலை 5 மணியளவில் கால்வாய் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 60 விவசாயிகளின் வேளாண் பயிர்கள் நாசமாகி உள்ளது. பாதிப்பு குறித்து வருவாய் துறை முதல் கட்ட ஆய்வு நடத்தும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.
Related Tags :
Next Story






