கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கு நெருக்கமான தொழில் அதிபர் கைது - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை


கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கு நெருக்கமான தொழில் அதிபர் கைது - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கரை அமலாக்கத்துறை கைது செய்தது.

மும்பை,

கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கரை அமலாக்கத்துறை கைது செய்தது.

கொரோனா சிகிச்சை மைய முறைகேடு

மும்பையில் 2020-ம் ஆண்டு கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கர் போலி ஆவணங்கள் மூலம் கொரோனா சிகிச்சை மைய ஒப்பந்தத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக மும்பை ஆசாத் மைதான் போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. அமலாக்கத்துறையினர் சமீபத்தில் மும்பையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர், முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான கட்சி நிர்வாகி சுரஜ் சவான், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் வழக்கு தொடர்பாக சுரஜ் சவான், சஞ்சீவ் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொழில் அதிபர் கைது

இந்தநிலையில் நேற்று அமலாக்கத்துறையினர் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் மற்றும் டாக்டர் கிஷோர் பிசுரேயை அதிரடியாக கைது செய்தனர். டாக்டர் கிஷோர் பிசுரே தகிசர் ஜம்போ கொரோனா சிகிச்சை மைய டீனாக இருந்தவர் ஆவார். கைது செய்யப்பட்ட இருவரும் பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். மோசடி குறித்து விசாரணை நடத்த அவர்களை 8 நாட்களுக்கு தங்கள் காவலில் ஒப்படைக்க அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. இதையடுத்து கோர்ட்டு வருகிற 27-ந் தேதி வரை அவர்களை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது. முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபரை அமலாக்கத்துறை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


1 More update

Next Story