ரெயில்வே சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு


ரெயில்வே சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Sep 2022 4:45 AM GMT (Updated: 23 Sep 2022 4:45 AM GMT)

டோம்பிவிலி ரெயில்வே சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு

தானே,

டோம்பிவிலி ரெயில் நிலையம் அருகே ஏற்கனவே இருந்த பழைய தடுப்பு சுவருக்கு பதிலாக புதிதாக தடுப்பு சுவர் அமைக்கும் பணி டோம்பிவிலி-கோபர் ரெயில் நிலையங்களுக்கிடையே சித்தார்த் நகர் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பணியின் போது பழைய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து தொழிலாளிகள் மீது விழுந்து அமுக்கியது. இந்த சம்பவத்தில் 2 கட்டுமான தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விஷ்ணு நகர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். ஒப்பந்ததாரர் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரியவந்தது.

இதன்படி ஒப்பந்ததாரர் மீது 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலேராவ் தெரிவித்து உள்ளார்.


Next Story